Type Here to Get Search Results !

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2024

 தற்பொழுது படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வேலைவாய்ப்பினை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அமைத்து தரும் வகையில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது.இம்முகாமில் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.முகாம் நடைபெறும் தேதி 09/08/2024.மேலும் முகாமில் கலந்து கொள்ள தேவையான ஆவணங்கள்,கல்வித்தகுதி என அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

சிவகங்கை மாவட்டம் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில்,வேலையா அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறலாம்.

மேலும்,இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்படிவம்,போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.எனவே விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.ஐ.டி டிப்ளோமா படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று,குடும்ப அட்டை,வேலைவாய்ப்பு அடையாள அட்டை,ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

Important Date:

முகாம் நடைபெறும் நாள்:09.08.2024

Official Notification & Application Link






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad